மீனம் ராசி அன்பர்களே, இன்று உயர் அதிகாரிகளால் உதவி கிடைக்கும், நாளாகவே இருக்கும். உத்தியோக முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மட்டும் கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவால் வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக கொஞ்சம் இருங்கள்.
மனைவி குழந்தைகளின் உடல் நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதுமட்டுமில்லாமல் இன்று பொருட்களை கையாளும் பொழுது நிதானத்துடன் கையாளுங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் முயற்சியின் பேரில் தான் படிக்க வேண்டியிருக்கும். படித்ததை எழுதிப் பாருங்கள். அது மட்டுமில்லாமல் இன்று ஆசிரியர்கள் சொல்வதை புரிந்து கவனித்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிக அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்