மகரம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகத்தான் இருக்கும். முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். அந்நிய தேசத்திலிருந்து தகவல் அனுகூலம் கொடுக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் நன்மை கிட்டும். இன்று எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவெடுக்கும் முன்பே தீர ஆலோசிப்பது ரொம்ப நல்லது.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்