Categories
இந்திய சினிமா சினிமா

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை…. அதிரடி டுவிட்டர் பதிவு….!!!!

‘பவித்ரா ரிஷ்தா’ மற்றும் ‘தியா அவுத் பாத்தி ஹம்’ ஆகிய ஹிந்தி தொலைகாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை கனிஷ்கா சோனி, தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “என்னை நானே திருமணம் செய்துகொண்டேன். நான் காதலிக்கும் ஒரே நபர் நான் மட்டும்தான். சிவன், சக்தி இரண்டும் என்னுள் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார் .

இதனைத் தொடர்ந்து, அவர் வெளியிட்ட வீடியோவில், “எனது பதிவை பார்த்த மக்கள், நான் மது அருந்திவிட்டும், கஞ்சா உட்கொண்டும் இந்த பதிவை பதிவிட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் நான் இதுவரை மது அல்லது வேறு போதை பொருள்களை பயன்படுத்தியதில்லை. முழு மனதுடன் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |