Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கலப்பு திருமணம் செய்த நபரின் மகனுக்கு…. சாதி-மதம் இல்லை என்ற சான்றிதழ்…. ஐகோர்ட் உத்தரவு….!!!!!

சென்னை மேற்கு அண்ணா நகரில் வசித்து வருபவர் மனோஜ் (36). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர் தனது 3 வயதான மகன் யுவனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் இணையதளம் வாயிலாக சென்ற ஜூன் மாதம் விண்ணப்பித்தார். எனினும் அம்பத்தூர் தாசில்தார் சான்றிதழை வழங்கவில்லை.

வரும் விஜயதசமி அன்று எனது மகனை பள்ளியில் சேர்க்க இருப்பதால் அதற்குள் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 2 வாரத்துக்குள் மனுதாரர் மகனுக்கு சாதி-மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் மனோஜின் மகன் யுவனுக்கு “எந்த சாதி பிரிவையும் சாராதவர் மற்றும் எந்த மதப்பிரிவையும் சாராதவர்” என்ற சான்றிதழை அம்பத்தூர் தாசில்தார் ராஜசேகர் வழங்கினார்.

Categories

Tech |