Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்றே கடைசி… EPS எடுத்த திடீர் யுடர்ன்…. செம ட்விஸ்ட் ….. அடுத்து என்ன நடக்க போகுது…..!!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதால் தொண்டர்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்து சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில் அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி சேலத்திற்கு சென்றுள்ளார். தற்போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகம் வர வாய்ப்பு இருப்பதால் இபிஎஸ் அங்கு செல்லும் பட்சத்தில் அங்கு தேவையற்ற சலசலப்பு உருவாகும் என்பதாலேயே அவர் சேலம் சென்றதாக கூறப்படுகிறது.

Categories

Tech |