உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்ற முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற ஹேப்பி ஸ்டீரிஸ் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
எனக்கு கொரோனா உறுதியான போது பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருந்ததற்கு உடற்பயிற்சியை முக்கிய காரணம். எனக்கு 70 வயது ஆகிறது. ஆனால் நானும் என்னுடைய மகனும் தோற்றத்தில் அண்ணன் தம்பி போலத்தான் இருப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.