Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் நடுரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பி… பெரும் பரபரப்பு….!!!!!!

கடலூரில் பெய்து வந்த மழையால் நடுரோட்டில் மின்கம்பம் அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் கடலூர் மஞ்சங்குப்பம் தெருவில் மின் கம்பி அறுந்து நடுரோட்டில் விழுந்து கிடந்தது. இந்நிலையில் அந்த நேரம் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அந்த பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருந்து விழுந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |