ஆசிய நாடொன்றை சேர்ந்த இளம் பெண் தன்னைவிட 42 வயது அதிகமான அமெரிக்கரை திருமணம் செய்ததால் கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், அதற்கு தம்பதியினர் பதிலடி கொடுத்து இருக்கின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜேக்கி (27) என்ற இளம்பெண்ணுக்கும், டேவ் (69) என்ற முதியவருக்கும் 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்கு இடையில் 42 வயது வித்தியாசம் உள்ளதால் அவர்கள் பலரால் விமர்சிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில் அடிக்கடி இரண்டு பேரும் இணைந்து பேசும், நடனமாடும் வீடியோக்களை பதிவிடுவார்கள். இதனை பார்க்கும் பலரும் ஜேக்கி பணம், கிரீன் கார்டு, விசாவுக்காக தான் டேவை திருமணம் செய்துகொண்டார் என விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருப்பினும் இதற்கெல்லாம் தம்பதியினர் சளைக்கவில்லை. இந்நிலையில் தம்பதியினர் “எங்களுக்குள் வயது வித்தியாசம் அதிகம்தான். ஆனால் அது எந்த ஒரு வித்தியாசத்தையும் எங்களது வாழ்வில் ஏற்படுத்தாது எனகூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.