காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைஷ்ணவி(19) என்ற மகள் இருக்கிறார். இவர் மங்கலக்குன்று பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற வைஷ்ணவி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வைஷ்ணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ஜெயக்குமார் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் மாணவியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் லாரி டிரைவரான வினு(34) என்பவருடன் மாணவி கருங்கல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வைஷ்ணவியின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வைஷ்ணவி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து போலீசார் இரு விட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வினுவின் பெற்றோருடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.