Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளக்கரை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவர்களிடம் 15 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்த ராம்குமார்(23) மற்றும் அரவிந்த்(23) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |