கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோடல்பட்டி பகுதியில் மணிவண்ணன்-ஓவியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதுடைய கனியாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஓவியா திம்மாபுரம் பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அணை கால்வாயில் ஓவியா துணி துவைத்த போது, குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை கால்வாயில் தவறி விழுந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓவியா தனது குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் தண்ணீரில் மூழ்கி கனியாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.