Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய மதுபோதை…. போலீசாரை திட்டிய வாலிபர்…. அதிரடி நடவடிக்கை…!!

மதுபோதையில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரன் காளியம்மன் கோவில் தெருவில் தில்லைகண்ணன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் கடம்பர் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்களை பார்த்து தில்லைகண்ணன் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார்.

இதனால் போலீசார் அங்கு சென்று தில்லைகண்ணனை தட்டி கேட்டனர். அப்போது தில்லை கண்ணன் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தில்லை கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

Categories

Tech |