Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் அண்ணன்….. மர்மமான முறையில் மரணம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் சகோதரன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டம் அஹ்ரா என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் கடந்த 13ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் தலைமுறைவாக உள்ளார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் சகோதரர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அஹ்ரா பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பெண்ணின் சகோதரன் தூக்கிட்ட நிலையில் பிணம்மாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கும்பல் சகோதரனை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டு உள்ளாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |