Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும்…. கொரோனா நோய் தொற்று…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

தென்கொரியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. 

தென்கொரியா நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது.

இருப்பினும் தற்போது அங்கு பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 1,38,812 பேருக்கு புதியதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று 1,29,411 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் அந்த நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2,21,29,387 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |