Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…..! மாத்திர அட்டையில் அழைப்பிதழ்…. மருத்துவத்துறை ஜோடியின் பலே முயற்சி…..!!!!

திருவண்ணாமலையில் மருத்துவத்துறை ஜோடியின் திருமணத்திற்கு மாத்திர அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ள சம்பவம் வித்தியாசமாக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த எழிலரசன் முதுநிலை மருத்துவ பட்டதாரி. இவர் தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே தெருவை சேர்ந்த வசந்தகுமாரி என்ற பெண்ணுக்கும் செப்டம்பர் மாதம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் தங்களின் அழைப்பிதழை அந்த துறை சார்ந்து வடிவமைக்க முடிவு செய்து, வேட்டவலத்தில் உள்ள அச்சகத்தில் அதற்கான அழைப்பிதழை வித்தியாசமான முறையில் மாத்திரை அட்டை போன்று வடிவமைத்துள்ளனர்.

மாத்திரை அட்டை பின்புறம் மருந்தின் பெயர், டோஸ் அளவு, தயாரிப்பு, இடம், காலாவதி தேதி ஆகியவை இடம் பெற்றிருக்கும். அதனை மாற்றி மருந்தின் பெயர் இடத்தில் எழில்வசந்தா-செப்-05 என தனது வருங்கால மனைவி பெயரைச் சேர்த்து திருமண நாளான செப்-05 ஐயும் இணைத்துவிட்டார். மேலும் மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் பெற்றோரின் பெயர் மற்றும் முகவரியை தெரிவித்துள்ளனர். பக்கவாட்டில் நீல நிற எழுத்தில் திருமண நாள், வரவேற்பு நாள் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.

Categories

Tech |