Categories
உலக செய்திகள்

சுதந்திர தினத்தன்று ரஷ்யா போடும் பிளான்…. உக்ரைன் மக்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உக்ரைன் மக்கள் அனைவரும் வருகிற வாரத்தில் அதிக எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருக்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். உக்ரைனியர்கள் தங்களது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கிரிமியா பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட புது குண்டுவெடிப்புகள் மற்றும் அங்குள்ள அணுமின்நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஒரு ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். பிவ்டெனுக் ரைன்ஸ்க் அணுமின் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மற்றும் உக்ரைனின் மிகப் பெரிய ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகில் புது குண்டுவெடிப்பு தாக்குதல் போன்றவற்றால் போரின்போது அணு விபத்து ஏற்படலாம் என்பது குறித்த புதிய அச்சத்தை தூண்டி இருக்கிறது.

இச்சூழ்நிலையில் வருகிற 24ம் தேதி சுதந்திரதினம் வருவதை முன்னிட்டு உக்ரைனில் தாக்குதல் நடத்தபடலாம் எனும் அச்சம் ஏற்படுகிறது. உக்ரைனானது சோவியத்ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்த 31-வது வருடம் நிறைவடைவதை குறிக்கும் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பதற்றம் அதிகரித்து இருப்பதால் கார்கிவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சுதந்திர தினத்துக்கு முன்பாக ரஷ்யாவின் கொடூர தாக்குதல் நடக்கலாம் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர் கூறியதாவது “இந்த வாரம் ரஷ்யா குறிப்பாக அசிங்கமான, தீய செயலைச் செய்ய முயற்சி செய்யலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க விழிப்புடன் இருக்க வேண்டும்” என அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.

இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைனின் ஆயுதப்படைகளின் ரிசர்வ் கர்னல் மற்றும் ராணுவ நிபுணர் ஒருவர் கூறியதாவது “சுதந்திர தினத்தன்று உக்ரைன்மீது பெரும் ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் முன்பே தயாராகி வருகிறது. பெலாரஸிலிருந்து மட்டுமின்றி கருங்கடல் மற்றும் ரஷியாவிலிருந்தும் எதிரி ஒரே நேரத்தில் 3 பக்கங்களில் இருந்தும் தாக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார். அதேபோன்று மறு முனையில் ரஷ்ய படைகளும் சுதந்திரதினத்தன்று உக்ரைனின் ஆயுதப்படைகளிடம் இருந்து ஒரு பெரிய தாக்குதலை எதிர்பார்க்கிறார்கள். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான புலனாய்வு இயக்குநரகம் படி “ஆகஸ்ட் 24 அன்று ரஷிய படைகள் பெரும் படைகளுடன் எங்களைத் தாக்குவார்கள். அவர்கள் ஒரு பெரும் மரண தண்டனையை ஏற்பாடு செய்ய விரும்புகிறார்கள்” என ரஷ்ய ராணுவவீரர் ஒருவர் கூறினார். அண்மையில் உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |