Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீடு திரும்பி கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்”…. சாலையில் நேர்ந்த சோகம்….!!!!!

சென்னிமலை அருகே தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே இருக்கும் அம்மாபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனியார் பிஸ்கட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் பாப்பினி கிராமத்தில் நடைபெற்ற விருந்தி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் இருக்கும் கணவாய் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிரே வந்த ஆட்டோவும் மூர்த்தியின் மொபட்டும் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டிலிருந்து மூர்த்தி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் இதுப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |