Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் இனி இதெல்லாம் செய்யாதீங்க….! மீறினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….!!!!

பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகர தூய்மைக்காகவும், அழகுடன் பராமரிக்க வேண்டும் என்பதற்காக சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, சுவரொட்டி ஒட்டிய நபர்களுக்கு 22 லட்சத்து 22, 810 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |