Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… 5 நாட்கள் வெளுத்து வாங்கும் கனமழை… அறிக்கை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்…!!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 21.8.2022 மற்றும் 22.8.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு. 23.8.2022 அன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. 24.8.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

25.8.2022 அன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் பொருத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

21.8.2022 அன்று தமிழக கடலோர பகுதிகள் குமரி கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். 22.8.2022 அன்று தமிழக கடலோர பகுதிகள் குமரிக்கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். லட்சத்தீவு பகுதிகள் கேரள கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். 23.8.2022 அன்று தமிழக கடலோரப் பகுதிகள் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். லட்சத்தீவு பகுதிகள் கேரளா கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபு கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும்.

24.8.2022 அன்று குமரி கடல் பகுதிகள் லட்சத்தீவு பகுதிகள் கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். 25.8.2022 அன்று லட்சத்தீவு பகுதிகள் கேரள கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |