இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.
இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறார்கள். இந்நிலையில், அந்நாட்டின் தேசிய மக்கள் சக்தி தலைவராக இருக்கும் அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. இந்த போராட்டம் கொழும்புவில் நடந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அதிபர் அணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும், போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினார்கள். மக்கள் ஆயிரக்கணக்கில் இந்த பேரணியில் பங்கேற்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.