Categories
அரசியல் மாநில செய்திகள்

6 மாதம் பொறுத்து இருங்கள்..! யாரும் குழப்பிக்க வேண்டாம்.. எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பியாச்சு..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் உள்ள அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பது எப்படி இலவசம் என்று சொல்கிறீர்கள் ?அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு நரேந்திர மோடி அவர்களுடைய அரசில் மானிட்டரி சப்போர்ட் இருக்கிறது. குறிப்பாக நம்முடைய 18 வயது கீழ் இருக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு சுகன்யா சம்ருத்தி ஸ்கீமில் மானியம் இருக்கிறது. இதெல்லாம் அவர்களுடைய உரிமை. வயதானவர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை, ஒரு சமுதாயத்திற்கு இருக்கிறது.

சமுதாயத்தினுடைய ரோல் இது. அதை அரசு மானிட்டரி சப்போட்டாக கொடுக்கிறதா ? அல்லது இன்ஸ்டிடியூஷனல் ஹோமா கொடுக்கிறதா ? என்பது தவறு கிடையாது. நாம் சொல்லுகின்ற இலவசம் என்பது செல்போனில் ஆரம்பித்து… தமிழ்நாட்டிற்கு அடுத்து பார்த்தீர்கள் என்றால், டிவி எல்லாம் தாண்டி இன்டர்நெட்டை தாண்டி, அடுத்த அடுத்த லெவலுக்கு அதை கொண்டு போகும் போது ஜனநாயகம் என்பது கேலி கூத்து ஆகிறது.

தயவுசெய்து இலவசத்தையும், ஒரு அரசனுடைய கடமையையும் நாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். சுப்ரீம் கோர்ட் அதற்காக தான் இத்தனை பேருக்கு நோட்டீஸ் கொடுக்கிறது, இலவசம் என்ன ? அரசின் கடைமை என்ன ? என்பதை  விவாதிக்க வேண்டும் என்று.. பினான்ஸ் மினிஸ்டருக்கு ஏன் நோட்டீஸ் கொடுக்கிறார்கள் ?

நிதிஆயோக்_க்கு ஏன் நோட்டீஸ் கொடுக்குறாங்க ? அந்த இலவசம் என்பது என்ன ? என்பதை பற்றி பேசலாம் என்று… இன்னும் ஆறு மாதம் பொறுத்தீர்கள் என்றால் சுப்ரீம் கோர்ட் என்னை பொறுத்தவரை நானும் உங்களை போன்ற குடிமகனாக எதிர்பார்க்கின்றேன். சுப்ரீம் கோர்ட் இதற்கு நடைமுறை போட்டு கொடுத்து விடுவார்கள் என்று நம்புகிறோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

Categories

Tech |