சிம்புவின் கொரோனா குமார் திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இத்திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இதை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் கோகுல் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் அப்போ கொரோனா குமார் திரைப்படம் சொன்னது போல் கைவிடப்பட்டதா என கவலையில் இருக்கின்றார்கள். இருப்பினும் கொரோனா குமார் திரைப்படம் கைவிடப்பட்டதாக எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.