துலாம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள்.
மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும்.
பிரச்சனைகளை நிதானமாக அணுகுங்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். அக்கம்பக்கத்தினர் உங்களை அன்பு பாராட்டக்கூடும். உத்தியோகத்தில் உள்ளார்கள் உங்களை மதித்து நடப்பார்கள். வெளிவட்டாரத்தில் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதல் கைக்கூடி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.