Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அதிகம் கூவுவது ஏன்? சாவர்க்கர் வீரன் என நிரூபிப்பீங்களா ? சீமான் சரமாரி கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாவர்க்கரை வீர சவர்க்கர் என்றால் வீரர் ஆகி விடுவாரா ? அவர் கோளை சவர்க்கர், வீரன் என்றால் சுபாஷ் சந்திர போர் வீரன், பகத்சிங் வீரன், என் முன்னவர்கள் வீரர்கள் செக்கெழுத்தவர் வீரன், தூக்கில் தொங்கிய என் மூதாதையர்கள் வீரர்கள்.

உயிர் உள்ளவரை உங்கள் அரசுக்கு பிரிட்டிஷ்காரர்களுக்கு விசுவாசமான இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கா ? இல்லையா? அவரை வீரர் என்று சொல்கிறீர்கள், எனக்கு பென்ஷன் கொடுங்கள் என்று பிரிட்டிஷ்காரர்களிடம் பென்ஷன் வாங்கிய பெருந்தகயர் வீரரா? இப்படித்தான் நீங்கள் காலம் காலமாக வரலாற்றை திரிச்சி, திரிச்சி, பொய்யாக போட்டுவது என்ன கொடுமை இதெல்லாம் ?

திடீரென்று வந்து தேசிய கொடியை ஏற்று மொத்தமாக இந்த பக்கம் திருப்ப வைத்துவிட்டு, பில்கிஸ் பானு என்பவரை வன்புணர்வு செய்து, பச்சிளம் குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்துக் கொன்று விட்டு ,11பேரை கொலை செய்தவர்களை 15 வருடம் ஆகிவிட்டது என்று விடுதலை செய்கிறார்கள். அதுவும் விடுதலை செய்வதற்கு முடிவு எடுத்துவிட்டு, ஒரு குழுவை அமைத்து,  அவர்களை பரிந்துரைக்க வைத்து செய்தவர்கள்..

நீதிமன்றம் சொல்லவில்லையே விடுதலை செய்யுங்கள் என்று. ஆனால் எங்களில் இருக்கின்ற பேரறிவாளனுக்கு கொடுத்த தீர்ப்பு, மீதி இருக்கின்ற ஆறு பேருக்கும் பொருந்துது என்கிறது. நீதிபதி தாமஸ் சொல்கிறார், அது பொருந்தும் என்று.. . ஆனால் நீங்கள் விடுதலை எதிர்கிறீர்கள்.  காங்கிரஸியை விட பிஜேபி அதிகம் கூவுவது ஏன்?

நீதிமன்றம் சொல்லிவிட்டது,  விடுதலை செய்யக்கூடாது என்கிறார், ஆனால் நீதிமன்றம் சொல்லாமல், யாரையும் கேட்காமல், எல்லாரையும் சுதந்திரக் கொடி, தேசப்பற்று என்று திருப்பி விட்டு, 11 பேரை விடுதலை செய்தீர்கள். இது எவ்வளவு பெரிய தேச குற்றம். சாவர்க்கர் வீரன் என நிரூபிப்பீங்களா ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |