நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் கிடந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மளிகை கடையில் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு கொண்டு சென்று உடைத்து பார்த்தபோது குழுக்களும், மண்ணும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் உடனடியாக நூடுல்ஸ் பாக்கெட்டை மளிகை கடைக்கு கொண்டு சென்றுள்ளார். அதற்குள் உரிமையாளர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.