மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொரியம்பட்டி கிராமத்தில் உள்ள சாலையில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பிடிபட்ட பாம்பு அம்மன்குறிச்சி வனப்பகுதியில் விடப்பட்டது.