ஆகஸ்ட் 22-ஆம் தேதி(நாளை) “மெட்ராஸ் டே” கொண்டாடப்பட உள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி மதராசபட்டினம் என்பது சென்னை என பெயர் மாற்றப்பட்டது. கடந்த 1688-ஆம் ஆண்டு இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மதராசபட்டினத்தை முதல் நகராட்சியாக அறிவித்தார். அதன்படி நாட்டின் முதல் நகராட்சி சென்னை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 22-ஆம் நாளை மெட்ராஸ் தினமாக கொண்டாட ஆரம்பித்தனர்.
சென்னை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்:
- 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி சென்னையின் பெருநகர பகுதியில் 11,981,478 மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐநா மெகா சிட்டிஸ் 2006 அறிக்கையின்படி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறத்தில் சென்னை 30 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
- இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக சென்னை நான்காவது பெரிய நகரமாகும்.
- 1-ஆம் நூற்றாண்டில் இருந்து சென்னை முக்கிய ராணுவ, நிர்வாக மற்றும் பொருளாதார மையமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். 1612-ஆம் ஆண்டு சென்னைக்கு வடக்கே உள்ள புலிக்காட்டில் டச்சுக்காரர்கள் குடியேறியுள்ளனர். இதனை அடுத்து 1639-ஆம் ஆண்டு மதராசபட்டினம் என்ற சிறிய மீனவர் கிராமத்தில் உள்ள நிலத்தை கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே குத்தகைக்கு எடுத்துள்ளார். ஒரு வருடம் கழித்து அங்கு கிழக்கிந்திய கம்பெனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியது. இதுவே இந்தியாவின் முதல் பெரிய ஆங்கில குடியேற்றம் ஆகும்.
- வங்காள விரிகுடாவை ஒட்டி சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரை 13 கிலோமீட்டர் நீளம், 437 மீட்டர் அகலம் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளமான இயற்கை நகர்ப்புற கடற்கரை ஆகும்.