தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் நல்ல வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.
இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் சென்ற ஜூலை 18 திரையரங்கில் வெளியாகியிருக்கின்றது. தனுஷின் படம் பல மாதங்கள் கழித்து திரையில் வெளியானதால் ரசிகர்கள் இந்த படத்தின் முதல் காட்சியை காண ஆவலாக இருந்தனர். அதன்படி இந்த படத்தின் முதல் காட்சி ஆரம்ப நிலையில் திரையரங்குகளை தனுஷ் ரசிகர்கள் திருவிழாவாக மாற்றினார்கள்.
இந்நிலையில் இப்படம் வெளியான நாள் முதலே அனைத்து விதமான ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படம் தனுஷை வெற்றி பாதைக்கு திருப்பி உள்ளது. இத்திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 23 கோடி வரை வசூல் செய்திருக்கின்றது. மேலும் உலகம் முழுவதும் இதுவரை 32 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.