Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த நிபந்தனையும் வேண்டாம்… சசிகலா, டிடிவி வந்தா போதும்… கட்சியை காப்பாற்ற ஓபிஎஸ் முடிவு… விளக்கிய ADMK மாவட்ட செயலாளர்..!!

அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது,  சசிகலா, டிடிவி என ஒவ்வொருவருடைய அறிக்கை என்ன ? அவருடைய கருத்துக்கள் என்னவென்று சொல்லட்டும் அதன் பிறகு நாங்கள் அடுத்த நடவடிக்கைக்கு செல்வோம். இப்போதைக்கு எந்த நிபந்தனையும் கிடையாது இணைய வேண்டும் அதுதான்.

அன்றைக்கு நாங்கள் கூறினோம். எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும். சசிகலாவை தினகரன் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னேன். அம்மா மறைவுக்கு அண்ணா திமுகவில் ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தார், அதன் பிறகு சசிகலாவை முதலமைச்சர் ஆக்கவேண்டும், பொதுச் செயலாளர் ஆக்க வேண்டும் என்று கட்சிக்காரர்கள் விரும்பினார்கள், அதை ஏற்றுக் கொண்டோம்.

ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்த இடத்தில் இருந்து விலகுங்கள் என்று சொன்னார்கள், அவர் கட்சிக்காரர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வேன் என்று அவர் கூறிவிட்டார். அதற்கிடையில் ஆளுநர் வந்து இப்போதைக்கு சசிகலாவை முதலமைச்சராக போட முடியாது என்று கூறினார், அதன் பிறகு ஓபிஎஸ் தர்மம் நடத்தினர். என்னை வலுக்கட்டாயமாக நீக்கி விட்டார்கள் என்று…

தர்மயுத்தம் என்பது கட்சிக்காக, இரட்டை இலைக்காக தர்மயுத்தம் நடத்தினார், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று… பாஜகவை பற்றி எங்களிடம் கேட்க வேண்டாம் அவர்களிடம் கேளுங்கள். அன்னைக்கு கேட்ட போது அவரே தெளிவாக சொல்லிவிட்டார் பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார், நாங்கள் துணை முதல்வராக ஏற்றுக் கொண்டேன் என்று, அன்னைக்கே முடிந்து விட்டது என தெரிவித்தார்.

Categories

Tech |