அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிஎச்டி மற்றும் எம் எஸ் ஒருங்கிணைந்த எம்.எஸ், பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளது.
இதற்கு முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இறுதியாண்டு தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்ப நகலின் பிரதியை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.இது தவிர சேர்க்கை பெற்று அண்ணா பல்கலை வளாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆராய்ச்சி உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றே கடைசி ;நாள் என்பதால் மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.