Categories
தேசிய செய்திகள்

பீகார் முதலமைச்சர் மீது தாக்குதல்…? மர்ம நபர்கள் கல் வீச்சு…!!!!

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய அவர், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சரானார். இந்த நிலையில், பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் இன்று அணிவகுத்து சென்றன.

அவற்றின் மீது திடீரென சில மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். எனினும், சம்பவம் நடந்தபோது, எந்த வாகனத்திலும் நிதிஷ் குமார் பயணிக்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |