Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அடுத்த வாரம் நேரில் சந்திக்க உள்ளார் .

இந்நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,காஞ்சிபுரம் உள்ளீட்டு ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுவது குறித்து கோரிக்கை வைக்கவே அவரை சந்திக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.மேலும் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் எம்ஆர்பி மூலம் வரும் அக்டோபர் இறுதிக்குள் நிரப்பப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Categories

Tech |