Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(22.8.22) மின்தடை….. எந்தெந்த பகுதிகள் தெரியுமா….? மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை: சிங்கம்புணரி துணை மின் நிலையத்திற்குடப்ட்ட சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ண மங்கல பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, எஸ்.வி.மங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

திண்டுக்கல்: பழனி, பாப்பம்பட்டி துணை மின்நிலையத்திற்குடப்ட்ட பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி, தாழையூத்து, நாகூா்பிரிவு, மற்றும் சுக்கமநாயக்கன்பட்டி, கரடிகூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டி துணைமின்நிலையத்திற்குடப்ட்ட லட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காலணம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காேதாப்பு, சேடபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

தேனி; ராசிங்காபுரம் துணை மின்நிலையத்திற்குடப்ட்ட ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை: சந்தவாசல் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சந்தவாசல், கண்ணமங்கலம், படவேடு, கேளூர், ஆத்துவாம்பாடி, ஏரிக்குப்பம், களம்பூர், வடமாதிமங்கலம், அய்யம்பேட்டை, சீனிவாசபுரம், கன்னிகாபுரம், முக்குறும்பை, பாலம்பாக்கம், கஸ்தம்பாடி, படவேடு, ராமநாதபுரம், அனந்தபுரம், ஒண்ணுபுரம், வண்ணாங்குளம், மேல்நகர், கொளத்தூர், குப்பம், வாழியூர், காளசமுத்திரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

நாமக்கல்: உஞ்சனை துணை மின் நிலையத்திற்குட்ப்பட உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம் பாளையம், ஆலாங்காடு புதூர், சத்திநாய்கன்பாளையம், மண்டகபாளையம், 85. கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரபாளையம், மோலியபள்ளி, மாச்சம்பாளையம், கோலாரம், கரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

வேலூர்: அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம், காவனூர், செய்யூர், நகரி குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Categories

Tech |