Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கனத்த மனதுடன்” காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா விலகல்….!!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவராக கடந்த 16ஆம் தேதி நியமிக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஒரு சில மணிநேரத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் இமாசல பிரதேச காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியில் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரான ஆனந்த் சர்மாவும் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கனத்த மனதுடனேயே நான் ராஜினாமா செய்துள்ளேன். வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரர் என நான் மீண்டும் வலியுறுத்தி கொள்வதுடன், எனது நம்பிக்கையில் தொடர்ந்து உறுதியாக இருப்பேன்” என தெரிவித்து உள்ளார்.

Categories

Tech |