நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திரை விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் தங்க பத்திரத்தின் விலை கிராமுக்கு 5197 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை தங்க பத்திரம் விற்பனை நடைபெறும். ஆன்லைன் மூலம் தங்க பத்திரம் வாங்குபவர்களுக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆன்லைன் மூலம் தங்க பத்திரம் வாங்கினால் கிராம் 5 ஆயிரத்து 147 ரூபாய் என்று தெரிவித்துள்ளது. தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு தங்க பத்திரம் தான் சிறந்த முதலீடு. எல்லா நெருக்கடியிலும் தங்கத்தின் மதிப்பு எப்போதும் உயரக்கூடும்.தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தின் மதிப்பும் உயரும். இதற்கு ஜிஎஸ்டி கிடையாது .
அது மட்டும் அல்லாமல் வருடத்திற்கு இரண்டு புள்ளி ஐந்து சதவீதம் வட்டி வருமானமும் உங்களுக்கு கிடைக்கிறது. செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் எதுவும் கிடையாது. தங்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமும் தங்க பத்திரத்தில் கிடையாது. வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச்சந்தை மூலமாக தங்க பத்திரத்தை வாங்கிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.