Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் பணி…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு கணினி வழியிலான தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ் மொழி கட்டாய தாளும் உண்டு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி முதுநிலை விரிவுரையாளர் 24, விரிவுரையாளர் 82 மற்றும் இளநிலை விரிவுரையாளர் 49 என மொத்தம் 155 பணியிடங்கள் நிரப்ப கணினி வழி தேர்வு நடத்தப்படுகின்றது. தற்போது வரை எழுத்து தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன் முறையாக கணினி வழி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பட்டியலில் உள்ளவர்களில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு விதிகளின்படி ஒரு பதவிக்கு இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

அதன் பிறகு இறுதி பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கணினி வழி தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |