Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடைந்து கிடந்த வக்கீல் வீட்டின் பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. பெரும் பரபரப்பு….!!!!!

சென்னை அடுத்த புழல்ரங்கா அவென்யூ 3வது தெருவில் வசித்து வருபவர் பார்த்திபன் (38). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். சென்ற 18ம் தேதி பார்த்திபன் வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார். இதையடுத்து நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 80 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரொக்கப்பணம் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம், புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பின் மோப்பநாய் வரவழைக்கப்பட்ட நிலையில், அது அரை கிலோ மீட்டர் தூரம் சென்று நின்றுவிட்டது. எனினும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடவியல் நிபுணர்கள் அங்கிருந்த ரேகைகளை பதிவு செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |