ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தெலுங்கானா அரசியலில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானாவில் முனு கோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தல் பரப்புரைக்காக அங்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஹைதராபாத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.