Categories
சென்னை மாநில செய்திகள்

நடு ரோட்டில் கொத்தனாரை ஓடஓட விரட்டி…. வெட்டிப் படுகொலை செய்த கும்பல்….. பரபரப்பு…..!!!

திருவெறும்பூர் பழைய குறிச்சி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் ஜெயபால் மற்றும் இந்துமதி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்துமதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவர்களின் மகன் பிரதாப் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இதனிடையே ஜெய பாலுவுக்கும் அவருடைய வீட்டின் அருகே உள்ள சுந்தர் என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மழை நீர் வடிவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஜெயபாலின் காலில் சுந்தர் அறிவாளால் வெட்டி உள்ளார்.

இது குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று காலை இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஜெயபால் கறி வெட்டும் கத்தியுடன் சுந்தர் தரப்பினரை வெட்ட வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுந்தர் தரப்பினர் ஜெயபாலை வெட்டுவதற்கு ஓட ஓட விரட்டியுள்ளனர். அவரிடமிருந்து தப்பிக்க ஜெயபால் கொங்கு நகர் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற சுந்தர் மற்றும் அவரது தம்பி மாசி, தளபதி,அவரது தம்பி ரகு மற்றும் ஹரியாகி ஐந்து பேர் கொண்ட கும்பல் ஜெயபாளை சரமாரியாக நடுரோட்டில் அரிவாளால் பயங்கரமாக வெட்டினர். அதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சுந்தர் உள்ளிட்ட ஐந்து பேரையும் தொலைபேசி தேடி வருகிறார்கள்.

Categories

Tech |