Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீசாருக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சூழ்நிலையில்  போலீஸ்கமிஷனர் தலைமையிலான ஆலோசனை கூட்டமானது இன்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கிய அறிவுரைகள் “சென்னையில் போதைப் பொருள் ஒழிப்புக்கான சிறப்பு சோதனையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுப்பதற்காக சென்னை எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகுவதை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அத்துடன் போதைப்  பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். மேலும் அவர்களுடைய சொத்துக்களை முடக்குவதற்கு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும். அதுமட்டுமின்றி போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுக்கு போலீஸ்அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் யாராவது உதவியாக இருப்பின் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும். போதைப்பொருட்களின் தீங்கு, விளைவுகள் பற்றி பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும்” என்று அவர் பேசினார். இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அன்பு, இணை கமிஷனர்கள் ரம்யா பாரதி, ராஜேஸ்வரி உட்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Categories

Tech |