பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடாவிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து புமியோ கிஷிடா தனிமைடுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகின்றார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது