Categories
மாநில செய்திகள்

இந்த ஆண்டு முதல்….. +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்… முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் இந்த ஆண்டு முதல் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். அதனைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று  2022- 23க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அவர் கூறியதாவது, புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 802 கோடி ஒதுக்கீடு செய்து அரசு பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள் அமைக்கப்படும்.கல்வித்துறையுடன் இணைந்துள்ள விளையாட்டு, இலைஞர் நலன் துறைக்கென தனி அமைச்சகம் அமைக்கப்படும். இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

மேலும் புதுச்சேரியில் உள்ள மீனவ கிராமங்களில் மிதக்கும் படகுத்துறை அமைக்கப்படும். காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி, ரூ 80 கோடியில் புதிய அரசு மருத்துவமனை கட்டப்படும்.பாரதியார் பல்கலைக்கூடத்தில்ரூ 16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும். வாடகை இடங்களில் செயல்படும் நூலகங்கள் அரசு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும்.புதுச்சேரியில் தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும். தனியார் பங்களிப்புடன் மீண்டும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். புதுச்சேரியில் இந்த ஆண்டு முதல் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |