ஆப்கானிலிருந்து திராட்சை, உலர்ந்த பழங்கள் மற்றும் மருத்துவ மூலிகைகளுக்கு மாற்றாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பொருட்களை வாங்க அந்நாடு முன்வந்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கியதை அடுத்து பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்தனர். இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா தங்களது நட்பு நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து 1 மில்லியன் பேரல் பீப்பாய் எண்ணெய்களை வாங்க ஆப்கான் சமீபத்தில் விருப்பம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தற்போது திராட்சை, உலர்ந்த பழங்கள் மற்றும் மருத்துவ மூலிகைகளுக்கு ஈடாக, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் பொருட்களை பண்டமாற்று முறையில் வாங்குவதற்கு ஆப்கானிஸ்தான் முன் வந்துள்ளது. இது தொடர்பான தகவலை தலிபான்கள் அரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் தலைவர் நூரிதீன் அஸிஸி தெரிவித்துள்ளார்.