Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”பெப்பர் சால்ட்” தலை … இறுக்கமான ”முகத் தோற்றம்”… வெளியானது ”ஜெயிலர்”பட போஸ்டர் ..!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஜெயிலர். அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது, இந்த நிலையில் அதற்கான போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

ஜெயிலர் இந்த திரைப்படம் எப்படி உருவாகின்றது என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதில் முதற்கட்ட அறிவிப்பாக நெல்சன் இயக்குகின்றார், திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், ரஜினி நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன் பிறகு ஜெயிலர் என்ற டைட்டிலும் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள்; அந்த டைட்டிலை  பொறுத்தவரை ஜெயிலர் என்ற அந்த டைட்டிலும் மொத்தமாக ஜெயிலுக்குள் இருக்கக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.

 

இந்த திரைப்படத்தில் ரஜினி எப்படி இருக்க போகிறார் ? அவர் தோற்றம் என்னவாக இருக்கப்போகிறது ? என்ற  கேள்விதான் ரசிகர் மத்தியில் இருந்து வந்தது. அதற்கு விடை கிடைக்கும் வகையில்  இன்று ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான கபாலி,  காலா படத்தில் நடித்ததை போலவே  பெப்பர் சால்ட் லுக்கில் கண்ணாடி அணிந்து கொண்டு, அவர் கழுத்தில் ஒரு ருத்ராட்ச மாலை போல அணிந்து இருக்கிறார். மேலும்  போலீஸ்கே உரிய தோரணையில்,  உடலமைப்பு முகத்தல் மிகவும் கடினம் இருப்பதை போல ஒரு இறுக்கமான ஒரு முகத்துடனே நடிகர் ரஜினிகாந்த் இந்த போஸ்டில் காணப்படுகிறார்.

Categories

Tech |