Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசியக்கோப்பையில்…. “சச்சினை ஓவர்டேக் செய்ய”….. நெருங்கி வரும் ஹிட்மேன்….!!

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த மற்றொரு சாதனையையும் ரோஹித்சர்மா காலி செய்ய தயாராக இருக்கிறார்..

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது. இதில் கடந்த 2018ல் ரோஹித் தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கை அணி 5 முறையும், மீதமுள்ள 2 சீசன்களில் பாகிஸ்தான் வென்றுள்ளது.

இந்நிலையில் 20 ஓவர்களாக நடைபெறும் 15ஆவது ஆசிய கோப்பையை எதிர்நோக்கி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். இந்த ஆசிய கோப்பை  போட்டி தொடங்கியவுடன் ஒரு புதிய சாதனையை இந்திய அணியின் கேப்டர் ரோஹித் சர்மா படைப்பார். அதாவது, தொடர்ந்து 7 ஆசியக் கோப்பை போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார்..

இதுவரை 6 முறை இந்தப் போட்டியில் விளையாடியுள்ள அவர், இந்திய அணிக்காக ஆசிய கோப்பையில் 26 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆசிய கோப்பையை இந்தியா அதிக முறை வென்றுள்ள நிலையில், கடந்த 2018ல் நடந்த ஆசிய கோப்பையில் ரோஹித் தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த மற்றொரு சாதனையையும் ரோஹித்சர்மா காலி செய்ய தயாராக இருக்கிறார். ஆசியக் கோப்பையில் இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவர் சச்சின், அவரை முந்திச் செல்லும் வாய்ப்பு ரோஹித்துக்கு உள்ளது. நிச்சயம் முறியடிப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்..

சச்சின் ஆசிய கோப்பையின் 21 இன்னிங்ஸ்களில் 51 க்கு மேல் சராசரியாக 971 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 2 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் அடங்கும். மறுபுறம், ரோஹித் இதுவரை 26 இன்னிங்ஸ்களில் 883 ரன்கள் எடுத்துள்ளார். இந்த போட்டியில் இந்தியாவுக்காக அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றுள்ளார். 2018 ஆசிய கோப்பையில், ரோஹித் அற்புதமாக செயல்பட்டு 5 இன்னிங்ஸ்களில் 317 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அவரது ஒரு சதமும் இதில் அடங்கும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியைப் பொறுத்தவரை, ஆசிய கோப்பை போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக ரன் குவித்த மூன்றாவது வீரர் ஆவார். இந்தப் போட்டியில் 14 இன்னிங்ஸ்களில் 63.83 என்ற சராசரியில் 766 ரன்கள் எடுத்துள்ளார். ஆசிய கோப்பையில் மூன்று சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் விராட் ஆவார்.

 

Categories

Tech |