Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்று முதல் தங்கப்பத்திரம் விற்பனை ஆரம்பம்…. தேதி, விலை இதுதான்…. எப்படி வாங்குவது தெரியுமா….?????

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே  இருப்பதனால் விலை உயர உயர வட்டி மூலமாக அதிக லாபம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். தங்கப்பத்திரம் வாங்கி எட்டு வருடங்கள் வைத்திருக்கலாம். எட்டு வருடம் முடிந்த பிறகு வருமானத்திற்கு வரி செலுத்த தேவை கிடையாது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இரண்டாம் தொகுப்பு   தங்கபத்திர விற்பனை  இன்று தொடங்குகிறது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி இரண்டாம் தொகுப்பு தங்கப் பத்திர விற்பனை முடிவுக்கு வருகிறது. ஆன்லைனில் தங்கப் பத்திரம் வாங்குபவர்களுக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, ஆன்லைனில் தங்கப் பத்திரம் வாங்கினால் கிராம் 5147 ரூபாய் என்ற விலைக்கு வாங்கலாம்.

 

Categories

Tech |