2000 ரூபாய் நோட்டுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்திலிருந்து குறைந்துவிடுகின்றன அதன் காரணமாக என்னவென்று பார்க்கலாம்.
புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைகடந்த 2016ஆம் ஆண்டு செல்லாது என்று திடீர் என மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது.கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இதுவும் பார்க்கப்பட்டது.ஆனால் 2000 நோட்டுகள் வெளியிடப்பட்ட பிறகு தான் கருப்பு பணம் நடவடிக்கைகள் அதிகரித்ததாக புகார்கள் எழ தொடங்கின. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைய தொடங்கியுள்ளது
கடந்த 2017 -18 ஆம் நிதியாண்டில் போது 336.30 கோடி நோட்டுக்களாக இருந்த இதன் எண்ணிக்கை 2018 -19 ஆம் ஆண்டில் 329. 10 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 7 கோடியே 20 லட்சம் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2017 – 18ஆம் நிதியாண்டில் 6,72,600 கோடி ரூபாயாக இருந்த இதன் மதிப்பு 2018- 19 ஆம் நிதியாண்டில் 6 ,58, 200 கோடியாக சரிந்ததுள்ளது என்றும், இது நடப்பு 2019 – 20 ஆம் நிதியாண்டில் இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை கட்டுபடுத்த ஆர்பிஐ தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் புழக்கத்தில் இருந்து இவை எப்படி காணாமல் போகின்றன என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
கருப்பு பணத்தை பதுக்க பலரும் 2000 ரூபாய் நோட்டுகளை பதிக்கி வைப்பதன் காரணமாகவே இவை புழக்கத்தில் இருந்து குறைவாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உண்மையில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு அல்ல ஒளித்து வைக்க மத்திய அரசு ஒரு ஏற்பாட்டை செய்து கொடுத்தது போல இது அமைந்து விட்டதாகவும் எதிர்காலத்தில் இதனை கட்டுப்படுத்த மாற்று யோசனை ஒன்றை மத்திய அரசு யோசிக்குமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.