Categories
தேசிய செய்திகள்

நுழைவு தேர்வு: வெளிநாட்டு மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்திய உயா் கல்வியின் தரத்தை வெளிநாடுகளில் பிரபலப்படுத்தும் அடிப்படையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உயா் கல்வி பெறுவதை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக யுஜிசி கூட்டம் சென்ற வாரம் நடந்தது. அவற்றில் பல்கலைக்கழகங்களிலுள்ள இளநிலை, முதுநிலை படிப்புகளுக்காக முன்பே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வெளிநாட்டு மாணவா்களுக்காக கூடுதலாக 25 % இடங்களை ஒதுக்குவதற்குப் பல்கலைக்கழகங்களுக்கும் மற்ற உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் இந்தியாவில் உயா்கல்வி பயில விரும்பும் வெளிநாட்டு மாணவா்கள் நுழைவுத்தோ்வு எழுதவேண்டிய அவசியமில்லை எனவும் யுஜிசி தெரிவித்து இருக்கிறது. இது பற்றி யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது “வெளிநாட்டு மாணவா்களைத் தகுதியின்படி பல்கலைக்கழகங்கள் சோ்த்துக்கொள்ளலாம். அந்த தகுதியை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்த வழிகாட்டுதல்களை யுஜிசி விரைவில் வழங்கும். அதை பின்பற்றி வெளிநாட்டு மாணவா் சோ்க்கையில் வெளிப்படைத் தன்மை நிலவுவதை உயா்கல்வி நிறுவனங்கள் உறுதிசெய்து கொள்ளலாம். வெளிநாட்டு மாணவா்களுக்காகக் கூடுதல் இடங்களை ஒதுக்குவது பற்றி தனிக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும்.

இதற்கிடையில் கட்டமைப்பு வசதிகள், போதுமான பேராசிரியா்களின் எண்ணிக்கை, மற்ற அடிப்படைத் தேவைகள் ஆகியவை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே கூடுதல் இடங்களை ஒதுக்க பல்கலைக்கழகங்களுக்கும் உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். ஆகவே வெளிநாட்டு மாணவா்களுக்கு என ஒதுக்கப்படும் கூடுதல் இடங்களில் அவா்கள் மட்டுமே சோ்த்துக்கொள்ளப்பட வேண்டும். இதனிடையில் அந்த இடங்கள் காலியாக இருந்தாலும், அவற்றில் இந்திய மாணவா்களைச் சோ்த்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது” என்று கூறினார். கொரோனா தொற்று பரவலுக்கு முன் இந்தியாவில் உயா் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையானது சுமாா் 75,000-ஆக இருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில் இந்த எண்ணிக்கையானது சுமாா் 23,400-ஆக குறைந்துவிட்டது.

Categories

Tech |