தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 26 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு,விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்றும் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.