அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, அண்ணா திமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டியிருக்கிறார். வானரகத்தில் நடக்கிறது. பிரம்மாண்டமாக, அவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி உறுப்பினர்கள் பாதி பேர், மற்றவர்கள் பாதி பேர். இந்த அளவிற்கு கூட்டம் நடந்தது.
அன்றைக்கு அந்த கூட்டம் நடக்கும் போது, சென்னை மாநகரத்தில் இருக்கக்கூடிய ஆறு மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழுவில் இருக்க வேண்டுமா? இருக்கக் கூடாதா? அந்த 6 மாவட்ட செயலாளர்களும் பொதுக்குழுவிற்கே செல்லவில்லை. எல்லோரும் தலைமை கழகத்திற்கு முன்பாக உட்கார்ந்து பொம்பளபுள்ளைங்க எல்லாரையும் உக்கார வச்சு இருக்கிறார்கள்.
எதற்காக பொதுகுழுவிற்கு போக வேண்டிய மாவட்ட செயலாளர் அங்கே செல்லாமல், தலைமை கழகத்தில் இருக்கிறார். ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், அவர்தான் ஒருங்கிணைப்பாளர். அவரை தடுப்பதற்கு யாரால் முடியும் ? ஓபிஎஸ் சென்றார் பிரச்சனை செய்தார்கள், அடிதடி தகராறு நடந்தது இதுதான் நடந்தது. அங்கே காவல் காத்தது யாரு? ஓபிஎஸை தடுத்தது யாரு? என கேள்வி எழுப்பினர்.